மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 5:45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்தனர்.முதலில் விநாயகர் தேரும் அடுத்து வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணியர் சுவாமி தேரடி வீதியில் பவனி வந்தன. காலை 7:10 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தன. தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மணிலா, கம்பு, மிளகாய், உளுந்து உள்ளிட்ட தானியங்களை தேரடியில் வீசியும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து 11:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.