வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகவதி அம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா மார்ச் 11 கொடியேற்றத்துடன் துவங்கியது.
அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை நடந்தன. சாஸ்தா அய்யனார் மற்றும் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.