Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் ... குன்றக்குடியில் பங்குனி தேரோட்டம் குன்றக்குடியில் பங்குனி தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திர தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திர தேரோட்டம்

பதிவு செய்த நாள்

21 மார்
2019
02:03

சிவகங்கை: சிவகங்கை சுப்பிரமணியசுவாமி மற்றும் உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில்களில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் பங்குனி திருவிழா மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.

விழாவின் 9ம் நாளான நேற்று (மார்ச்., 20ல்) காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, அரண்மனைவாசல், நேரு பஜார், மதுரை முக்கு, மேலரத வீதி, சத்தியமூர்த்தி தெரு வழியே கோயிலை அடைந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியரை வழிபட்டனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கவுரவ கண்காணிப்பாளர் ராமசாமி, கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

உருவாட்டி: பெரியநாயகி அம்மன் கோயிலில் மார்ச் 12 ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். விழாவின் 9ம் நாளான நேற்று (மார்ச்., 20ல்) காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகத்திற்கு பின் தேரோட்டம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தேவஸ்தானம் மற்றும் விழாக் குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வராகி அம்மன், தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவள். ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar