காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருநாள் தேரோட்டம் நடைபெற்றது.
9ம் நாள் விழாவான நேற்று (மார்ச்., 20ல்) காலை 5:30 மணிக்கு திருத்தேரில் வள்ளி தேவசேனா வுடன் சண்முகநாதர் எழுந்தருளினார். திருத்தேரை ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத் துடன் இழுத்துச் செல்ல நான்கு ரத வீதிகளின் வழியாக தேர் சுற்றி வந்து நிலையை அடைந்தது.
தேரோட்டத்திற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார்.