பதிவு செய்த நாள்
21
மார்
2019
02:03
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பிரகன்நாயகி சமேத கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.அதனையொட்டி, நேற்று (மார்ச்., 20ல்) காலை 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும். காலை 9:00 மணிக்கு புதிய தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் ஸ்ரீ ஐயனார் பிரமோட்டர்ஸ் உரிமையாளர் விஜயகுமார். கலைச்செல்வி ஆயில் விற்பனை நிலைய உரிமையாளர் ராஜேந்திரன், ஸ்ரீ விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நமச்சிவாயம். பாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகிகள், கூட்டுறவு சங்கத் தலைவர் சாந்தி மதியழகன், துணைத் தலைவர் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முன்னி ராஜ்குமார்.நகர செயலர் முத்துலிங்கம். ஸ்ரீ ராஜ நாராயண பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமதாஸ்.ராஜேந்திரன், கலியமூர்த்தி, விஜயகுமார், கோவிந்த சாமி, செல்வம், மணவாளன், புவன சுந்தரசரவணன்.வழக்கறிஞர் இளமுருகன், ரோட்டரி சங்க தலைவர் திலீப், தே.மு.தி.க., ஒன்றிய செயலர் திருமால், பா.ம.க., ஒன்றிய செயலர் பழனி மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.