பதிவு செய்த நாள்
21
மார்
2019
03:03
குமாரபாளையம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி கோவில் சார்பில், காவிரிஆற்றிலிருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்தவாறு, ஆண், பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமியர் உள்பட பெருமளவில் பங்கேற்று கிரிவலம் வந்து, கோவிலையடைந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதையடுத்து விநாயகர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, கல்யாண சுப்ரமணியர், இடும்பன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும், அபிஷேகம் நடைபெற்றது. நான்காவது ஆண்டாக, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.