பதிவு செய்த நாள்
21
மார்
2019
03:03
அவிநாசி : அவிநாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலா கலமாக நடந்தது.அவிநாசி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம், கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்), சுவாமி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 20ல்) காலை, 6:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேர்வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவில், இன்றும், நாளையும் (மார்ச்., 20, 21ல்) தேரோட்டம், வரும், 24ல் மகா தரிசன காட்சியும் நடக்கிறது.