பதிவு செய்த நாள்
22
மார்
2019
04:03
பல்லடம்:பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 4.30 மணி முதல், விநாயகர், நவகிரக யாகம் நடந்தது. மதியம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்டவை நடைபெற்றன. மாலை, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை, தொடர்ந்து, 5.30 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, திருத்தேரில் எழுந்தருளினார்.பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க, கிரிவல பாதை வழியாக, பக்தர்கள் வடம் பிடித்து நிலை சேர்த்தனர். சிறப்பு அலங்காரத்தில், முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.