பதிவு செய்த நாள்
23
மார்
2019
03:03
வீரபாண்டி: பெருமாள் கோவிலில், கோவிந்தா கோஷம் முழங்க, தேரோட்டம் நடந்தது. சேலம், ராக்கிப்பட்டி அருகே, செங்கோடம்பாளையம், சென்றாய பெருமாள் மலைக்கோவிலில், பங்குனி தேர் திருவிழா, கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (மார்ச்., 22ல்), தேரோட்டம் நடந்தது. காலை, ஸ்ரீதேவி, பூதேவியுடன், சென்றாய பெருமாளை, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர்.
மாலை, சிறப்பு பூஜைக்கு பின், கோவில் முன் திரண்டிருந்த பக்தர்கள், சிறு திருவடியான ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் தேர்களை வடம்பிடித்து, மலையை சுற்றி இழுத்து வந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில், கோவிந்தா கோஷம் முழங்க, தேர் அசைந்தாடி வந்தது. இரவு, புஷ்ப விமானத்தில், சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று (மார்ச்., 23ல்) காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், திருவிழா நிறைவடையும்.