Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் இங்கு ‘ஐந்து’ அலெக்சாண்டர் சொன்ன ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினால் நல்லது நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
02:03

கடவுளுக்கு பிரியமானவராக யோபு என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு ஏழு மகன், மூன்று மகள்  உண்டு. அவரைக் கண்டு பொறாமைப்பட்ட சாத்தான், ஒருமுறையாவது கடவுளை வெறுத்துப் பேச வைக்க வேண்டும் என திட்டமிட்டது சாத்தான். “யோபுவைச் சோதிக்க அனுமதி தர வேண்டும்” என கடவுளிடம் கேட்டது சாத்தான். “யோபுவுக்கு தனிப்பட்ட வகையில் துன்பம்  தராமல், அவனது உடமைகளை மட்டும் அழித்து விடு” என்றார் கடவுள். ஆடு, மாடு, ஒட்டகம், பயிர்களை மட்டும் அழித்தது சாத்தான். வேலையாட்களும் கொல்லப்பட்டனர். வீடு இடிந்து பத்து குழந்தைகளும் இறந்தனர்.  இந்நிலையில் நம்மைப் போன்றவர்கள்,”கடவுளே... உமக்கு என்ன குறை வைத்தேன். காணிக்கை கொடுத்தேன். உம்மை வழிபட்டேன். இப்படி செய்து விட்டீரே! உமக்கு கண் இல்லையா” எனத் திட்டுவோம். யோபுவோ,“கடவுள் கொடுத்தார்; அவரே எடுத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்” என்றார்.  

இதன் பின்னும் சாத்தான் விடவில்லை. மேலும் யோபுவுக்கு துன்பத்தை ஏற்படுத்த அனுமதி பெற்றது. ’உயிரை மட்டும் எடுக்காதே’ என்ற நிபந்தனை விதித்தார் கடவுள். யோபுவின் உடலில் கட்டிகள் தோன்றின. வேதனை தாங்க முடியவில்லை.  யோபுவின் நண்பர்கள்,“நீ கடவுளுக்கு எதிராக பாவம் செய்திருக்கிறாய்; அதனால் தான் உனக்கு இந்த நிலை வந்தது” என்றனர். “எந்த சூழ்நிலையிலும் கடவுள் செய்வதே சரியானது’ என்பதில் தெளிவாக இருந்தார் யோபு. சோதனைகளைப் பொறுத்துக் கொண்ட அவரைக் கடவுள் ஆசிர்வதித்தார். இதன் பின்னர் ஏழு மகன்கள், மூன்று மகள்கள் அவருக்குப் பிறந்தன. 140 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர், நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளைக் கண்டு மகிழ்ந்தார். சோதனை குறுக்கிட்ட காலத்திலும் நம்பிக்கை இழக்காதவர்களை கடவுள் கை விடுவதில்லை.   

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar