மன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை தன்வசப்படுத்தினார். அவரைச் சந்தித்த அறிஞர் ஒருவர்,” உங்களைப் போல வெற்றிகளை மற்றவர்களால் அடைய முடியவில்லையே ஏன்?” எனக் கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், “இது என் வெற்றியல்ல, கடவுளின் வெற்றி. அவர் அருளாலேயே கிடைத்தது. எந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்ததை விட அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். இதற்கெல்லாம் மேலாக என்னிடம் தோற்ற மன்னர்களை நண்பர்களாக கருதி மரியாதை அளித்தேன். இவையே எனது வெற்றி ரகசியம்,” என்றார். “உங்கள் எதிரிகளையும் நேசித்து நன்மை செய்யுங்கள்” என்கிறது பைபிள்.