பதிவு செய்த நாள்
28
மார்
2019
11:03
நாமக்கல்: நாமக்கல், மலைக்கோட்டையில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில், குடவறைக் கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
எதிரில், 18 அடி உயரத்தில், ஒரே கல்லினால் ஆன ஆஞ்சநேயர், வணங்கிய நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நரசிம்ம சுவாமி பங்குனி தேர்த்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, கடந்த, 14ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. கடந்த, 20ல் நரசிம்மர் மற்றும் அரங்கநாதருக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. 22ல் நடந்த தேரோட்டத்தில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தேரை இழுத்தனர். நேற்று காலை, புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வணங்கினர். இன்று இரவும், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.