தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 11:03
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானவர்கள் பூக்குழி இறங்கினர்.
தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை ஒட்டி கடந்த வாரம் காப்புக்கட்டுதல் உற்ஸவத்தை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர்.விழாவின்போது மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு ராளமான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே பூக்குழி இறங்கினர், பலர் மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.