மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 12:03
மங்கலம்பேட்டை: .பூவனூர் திரவுபதியம்மன் கோவிலில் நாளை (29ம் தேதி) தீமிதி திருவிழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
அதை தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.கடந்த 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை (29ம் தேதி) முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 10:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.