அபிராமம்: அபிராமம் அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீசப்பாணி கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அபிராமம் - முதுகுளத்துார் ரோட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீசப்பாணி கோயில் பங்குனி பொங்கல் விழா, மார்ச் 19 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 22 ல் பால்குடம், அன்னதானம், மார்ச் 24 ல் திருவிளக்கு பூஜை, மார்ச் 28ல் பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம் நடந்து, அபிராமம் கண்மாயில் கரைக்கபட்டது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன்பங்குனி பொங்கல் விழா முடிந்தது.