பதிவு செய்த நாள்
29
மார்
2019
02:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி பிரம்மோற்சவம், நேற்று (மார்ச்., 28ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை (மார்ச்., 30ல்) காலை, கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது.
பெருமாளின், 108 திவ்யதேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம், நேற்று (மார்ச்., 28ல்) காலை, 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, சுவாமி பல்லக்கில் எழுந்தருளி, வரதர் கோவில் மாட வீதி வழியாக உலா வந்தார். மாலை, சிம்ஹ வாகன வீதியுலா நடந்தது.வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். மூன்றாம் நாள் உற்சவமான நாளை (மார்ச்., 30ல்)காலை, கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது.