திருப்புத்துார்: தி.வைரவன்பட்டியில் பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மூல பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜை துவங்கியது.
தொடர்ந்து கோ பூஜை, கஜபூஜை, லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் இரவு 9:30 மணிக்கு வஸ்திர யாகம்,புஷ்பயாகம்,மகா பூர்ணாகுதி நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுடன் சிவாச்சாரியார்கள் பிரகாரம் வலம் வந்து பைரவர் சன்னதி வந்தனர். பின்னர் பல வித திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. மலரலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவு வரை நடந்த யாகசாலை பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.