காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உண்டியலில் ரூ.3.28 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 01:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உண்டியலில், 3.28 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு எண்ணப்படும்.அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல், நேற்றுமுன்தினம் (மார்ச்., 31ல்) திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 3 லட்சத்து 28 ஆயிரத்து 451 ரூபாய், காணிக்கையாக கிடைத்தது.