மங்கலம்பேட்டை கோ.பூவனூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2019 01:04
மங்கலம்பேட்டை:கோ.பூவனூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்றுமுன்தினம் (29ம் தேதி) முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 10:00 மணிக்கு அரவாண் களபலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.