பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
02:04
திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலின், புதிய இணை ஆணையராக, ஞானசேகரன் (முழு கூடுதல் பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டார்.திருத்தணி, முருகன் கோவிலின், இணை ஆணையராக செ.சிவாஜி பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் (மார்ச்., 30ல்)பணி ஓய்வு பெற்றார்.இவருக்குப் பதிலாக, திருவண்ணா மலை, அருணாச்சல ஈஸ்வரர் கோவிலின், இணை ஆணையராக பணியாற்றி வரும் ஞான சேகரன், திருத்தணி, முருகன் கோவில் இணை ஆணையராக (முழு கூடுதல் பொறுப்பு), நேற்று முன்தினம் (மார்ச்., 30ல்) மாலை, இந்து சமயஅறநிலைத் துறை ஆணையர் நியமித்தார்.
இந்நிலையில், பணி ஓய்வு பெற்ற சிவாஜிக்கு, திருத்தணி கோவில் நிர்வாகம் சார்பில், பாராட்டு விழா, தக்கார் ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது.இதில், கோவில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், முன்னாள் இணை ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.