பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
02:04
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னிதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, (மார்ச்., 31ல்)சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ -- விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, நான்கு கரத்துடன், ஆகாயத்தை பார்த்தபடி அருள்பாலிக்கும் ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில். தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.ஏகாதசியை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 31ல்), காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.