பதிவு செய்த நாள்
02
ஏப்
2019
02:04
நாமக்கல்: வர்த்தக நிறுவனங்கள் நடப்பாண்டு வர்த்தகத்தை, ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவக்கினர்.
நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்நேயர் கோவில் உள்ளது. அங்கு சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். மேலும், தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள், லாரி தொழில், நிதி உள்ளிட்ட நிறுவனங்களில் ஏப்., முதல் நாளான நேற்று (ஏப்ரல்., 1ல்), புதுக்கணக்கு துவங்கினர். அவ்வாறு கணக்கு துவங்கும் பல்வேறு நிறுவனங்கள், ஆஞ்ச நேயர் கோவிலுக்கு வந்து சுவாமி பாதத்தில் தங்கள் கணக்கு நோட்டை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனால், கோவிலில் தொழிலதிபர்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.