மேலூர் : மேலூரில் காளியம்மன் கோயில் 120ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா துவங்கியது.இதையொட்டி நேற்று முன்தினம் (ஏப்., 1ல்) திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (ஏப்., 2ல்) பூஜாரிகள் சக்தி கரகம் எடுத்தனர். தொடர்ந்து கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டது. இன்று (ஏப்., 3) பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம். நாளை (ஏப்., 4) முளைப்பாரி ஊர்வலமும், அம்மன் தேரில் எழுந்தருளுதலும் நடக்கிறது. ஏப்.,5ல் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.