மேலூர் : மேலூர் அருகே சிட்டம்பட்டி சேவி அம்மன் கோயிலில் சேங்கை(ஒடையில்) வாருதல் விழா நடந்தது.சிட்டம்பட்டியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரக் கோயிலுக்கு சென்றனர்.
அங்குள்ள ஒடையில் புனித நீராடிய பக்தர்கள் கைபிடி மணலை அள்ளி மழை பெய்ய வேண்டி கோயில் முன்பு கொட்டி தரிசித்தனர். பின் சேவி அம்மன் கோயிலுக்கு சென்றனர். இருபதாண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.