கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே மணப்பசேரி மந்தை முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது.பூசாரி வீட்டில் இருந்து அம்மன் பிள்ளையார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அலங்காரத் தேரில் முத்தாலம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்., 3) அம்பாள் கோயிலில் இருந்து அரை கி.மீ., தூரத்திலுள்ள வேங்கடம் கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைப்பதுடன் திருவிழா நிறைவு பெறும்.