உத்தரகோசமங்கை சிவன் கோயில்களில் பங்குனி பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2019 02:04
உத்தரகோசமங்கை : பங்குனி பிரதோஷ விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை மங்கள நாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவர் மற்றும் பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் மாலையில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
* சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமியம்மன் கோயில் பழமை வாய்ந்ததாகும். நந்திக்கும், மூலவருக்கும் 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷக்குழுவினர் செய்திருந்தனர்.
* கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில் உற்சவர் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை மாதாதந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபேஸ்வரர் சமேத வல்லபேஸ்வரி சன்னதியில் பிரதோஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை யினர் செய்திருந்தனர்.