ஸ்ரீவி., மாரியம்மன் பூக்குழி விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2019 12:04
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழித்திருவிழாவில் 13 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவின் 12 ம் நாளான நேற்று காலை 5:45 மணிக்கு பூ வளர்க்கபட்டது. காலை 9:00 மணிக்கு பந்தலுக்கு எழுந்தருளிய அம்மனுக்கு அர்ச்சகர் ஹரிஹரன் சிறப்பு பூஜைகள் செய்தார். பட்டத்தரசியம்மன் கோயிலில் துவங்கி நகரின் ரத வீதிகளில் உள்ளகோயில்களில் தரிசனம் செய்த பக்தர்கள், பகல் 12:05 மணி முதல் பூக்குழி இறங்க அனுமதிக்கபட்டனர். விருதுநகர், தேனி, மதுரை,திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் தீமிதித்தனர். மாலை 4:00 மணிவரை 13 ஆயிரம் பேர் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். டாக்டர்கள் ராமனாதன் , லட்சுமணன் தலைமையிலான குழுவினர் மருத்துவ உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.இன்று காலை 12:05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.