பதிவு செய்த நாள்
05
ஏப்
2019
02:04
பள்ளிபாளையம்: ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர். பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற அக்னிமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த இரண்டு வாரத்திற்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான குண்டம் மிதிக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் (ஏப்., 3ல்) நடந்தது. நேற்று (ஏப்., 4ல்), அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு, அக்ரஹாரம் ஆற்றுப்பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, ஒட்டமெத்தை, நான்கு சாலை சந்திப்பு, ஆர்.எஸ்.சாலை, வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.