பதிவு செய்த நாள்
05
ஏப்
2019
02:04
வீரபாண்டி: சித்திரை தேரோட்ட திருவிழா, முகூர்த்த கம்பம் நடுதலுடன் தொடங்கியது. சேலம், உத்தம சோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா, நேற்று (ஏப்., 4ல்) தொடங்கியது. அதற்காக, கம்பத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்கள் முன்னிலையில் நடப்பட்டது. வரும், 17ல் தேரோட்ட விழா கொடியேற்றம், 18ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது. தேரோட்டம், 19 மாலை, 4:00 மணிக்கு நடக்கவுள்ளது. 20ல் சத்தாபரணம், 21ல் ஊஞ்சல் உற்சவம், 22ல் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன், சித்திரை திருவிழா நிறைவடையும்.