பதிவு செய்த நாள்
06
ஏப்
2019
11:04
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா, கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது.
விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன்சிம்மம், குதிரை, காமதேனு, அன்ன, பூத வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.முக்கியத் திருவிழாவான பொங்கல் விழாநேற்று நடைபெற்றது. விழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், சேவல், ஆடுகள் பலியிட்டும், தங்களது நேர்த்திக்கடனைசெலுத்தினர். நாளை இரவு, மின்ஒளி தீப அலங்காரத்துடன் தேரோட்டம்நடைபெறும்.
ஏ.டி.எஸ்.பி.,மங்களேஸ்வரன் தலைமையில், இளையான்குடி ஆய்வாளர்பழநிமுத்து உட்பட, 300க்கும் மேற்பட்ட போலீசார் திருவிழாபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 25க்கும்மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மானாமதுரையில் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடைபெற்றது.விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தாயமங்கலத்திற்கு சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.மானாமதுரையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று தாயமங்கலம் ரோட்டில் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டுதங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர்.