வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி நேற்று காலை விக்னேஷ்பட்டர் தலைமையில்சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. பிரகாரத்தில் பல்லக்கில் உலா வந்த அம்மன், சுவாமி முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. விழா நாட்களில்அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,16திக்விஜயம், 17 காலை 9:00 முதல் 10.25 மணிக்குள் திருக்கல்யாணம், 18 மாலை தேரோட்டம் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.