ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழிவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
இதை முன்னிட்டு நேற்று காலை 11:30 மணிக்குஅம்மனுக்கு சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் ஹரிஹரன் செய்தார். இதன்பின் தேருக்கு அம்மன் எழுந்தருள பகல் 12:05 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோயிலை சுற்றிய வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ் செய்திருந்தனர்.