மயிலம்:திருவக்கரை வக்ர காளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, ஜோதி தரிசனம் நடந்தது.காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்ர காளியம்மன், வக்ர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.பகல் 12:00 மணிக்கு, வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.