பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
11:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் தேரை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டதால், தேரின் அழகு சிதைந்து வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோவில் தேர் திருவிழா 100 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை அடுத்து, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து, 50 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக திருத்தேரை செய்து தேரோட்டம் நடத்த மறைந்த முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2015ம் ஆண்டு தேர் தயாராகி, அந்த ஆண்டு முதல் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர் பாதுகாப்பாக அகர்லிக்சீட் என கண்ணாடி வேலி அமைத்து நிறத்தப்பட்டுள்ளன.
இத்தேர், மூன்று அடுக்கு கொண்டவை, பெரியநாயகி, விநாயகர், முருகன், சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், குதிரை மற்றும் யாளி உருவங்கள், ஐந்தரை அடியில் கைலாசநாதர் கைலாய காட்சி சிற்பம், பின்புறம் அதே அளவில் நந்தி மண்டபத்துடன் கூடிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிற்பம் என 360 சிற்பங்கள் உள்ளன. பதினாறரை அடி உயரம், பதிமூன்றரை அடி அகலம் கொண்டவை. ஆனால் தற்போது தேர்லில் பல இடங்களில் வெடிப்பு விட்டு, சிற்பங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. புதியதாக தேர் செய்யப்பட்ட இந்தாண்டு நான்காவது ஆண்டாக வரும் 16ம் தேதி, தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் செய்யப்பட்ட ஐந்தாண்டு கூட ஆகாத நிலையிலும், திருவிழாவின் போது மட்டுமே அரண்மனை தேவஸ்தானம் பாரமரிப்பு செய்வதாலும் மற்ற நாளில் தேரை கண்டுக்கொள்வதை இருப்பதாலும், தேரின் அழகு சிதைந்து வருகிறது என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.