திருப்புத்துார் முத்துமாரியம்மன் பிரம்மோத்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2019 11:04
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பிரம்மோத்ஸவம் துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் இரவு இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணி அம்மன் கோயிலிலிருந்து உற்சவ அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் கீரணிப்பட்டிக்கு புறப்பாடாகி வந்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காப்புக்கட்டி பிரம்மோத்ஸவம் துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெறும். ஏப்.,12ல் மாலையில் ஊஞ்சல், இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும், ஏப்.,13ல் புஷ்ப பல்லாக்கும், ஏப்.,15 மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும். ஏப்.,16 மாலை உற்சவ அம்மன் மீண்டும் இளையாத்தங்குடிக்கு திரும்புதல் நடக்கிறது.