பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
02:04
கடலாடி:கடலாடி அருகே ஆப்பனூர் தெற்கு கொட்டகை கிராமத்தில் பழமையான பீலிங்கன் முனீஸ்வரர் கோயில்பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது.
மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடந்தது. அ.தி.மு.க., ஒன்றியச்செயலாளர் முனிய சாமி மாட்டுவண்டிப் பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.ஆப்பனூர் தெற்கு கொட்டகை முதல் கடலாடி - முதுகுளத்தூர் சாலை வரை 10 கி.மீ., தொலைவிற்கு பெரிய மாடுகள் போட்டியில் 14 மாட்டுவண்டிகள் பங்கேற்றது.முதலிடத்தை சித்திரங்குடி ராம மூர்த்தியும், இரண்டாமிடத்தை மதுரை மேலூர் சந்திரன், மூன்றாமிடத்தை மதுரை ஆத்துப்பாலம் அழகர்மலையான் மாடுகளும் பிடித்தது.
நடுமாடுகள் பிரிவு: 7 கி.மீ., போட்டியில் 9 மாட்டுவண்டிகள் பங்கேற்றதில் முதலிடத்தை தூத்துக்குடி வீரநாயக்கன் தட்டு, இரண்டாமிடத்தை தஞ்சாவூர் வெட்டுபூங்கொல்லை, மூன்றாமிடத்தை எம்.கரிசல்குளம் பாண்டித்தேவர் மாடுகளும் பிடித்தது.
பூஞ்சிட்டு மாடுகள் பிரிவு: 4 கி.மீ., போட்டியில் 12 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. முதலிடத்தை திருநெல்வேலி கடம்பூர் கருணாகர ராஜா, இரண்டாமிடத்தை மதுரை அவனியாபுரம் முருகன், மூன்றாமிடத்தை ஸ்ரீவைகுண்டம் சிங்கிலிப்பட்டி சங்குச்சாமி மாடுகளும் பிடித்தது.மாட்டின் உரிமையாளர்களுக்கும்,வண்டி செலுத்திய சாரதிகளுக்கும் வெண்கல, சில்வர் பாத்திரங்கள் ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.