மற்றவர் துன்பம் போக்க பணம் கொடுப்பது தான் உதவி என நினைக்க வேண்டாம். “செல்லும் வழியில் முட்கள் நிறைந்த மரக்கிளை கிடந்ததைக் கண்டதும், அதை அப்புறப்படுத்தினான் ஒருவன். அதற்காக அவனது பாவங்களை எல்லாம் மன்னித்தான் இறைவன்” என்கிறது குர்ஆன். அந்தப் பாதையில் அவனுக்கு முன்பாக சென்றவர்கள் முள்ளைப் பார்த்தும், அப்புறப்படுத்த முன்வரவில்லை. போதாக்குறைக்கு ’யார் இப்படி நடுவழியில் போட்டது? என கோபமாகத் திட்டவும் செய்தனர். முள்ளை அப்புறப்படுத்தியவர், பாதையில் இனி செல்ல இருப்போரின் பாதங்களைப் பாதுகாத்ததால் இறையருளால் பாவம் எல்லாம் மன்னிக்கப்பட்டது. சிறிய சேவையும் பெரிய நன்மை தரும்.