தொழும் நேரத்தில் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டால் தொழுகையை விட்டு வரலாமா. அவர்களுக்காக ஒரு சம்பவம். இமாம் ஹூசைனிடம், துன்பத்தில் வாடிய ஒருவர் தன் நிலையை எடுத்துச் சொல்லி உதவி கேட்டார். இமாம் அப்போது, “நான் தொழுகையில் இருக்கிறேன்; வெளியே வர முடியாது,” என்றார். வந்தவர் இமாமின் சகோதரர் ஹசனிடம் சென்று தன் நிலையைச் சொன்னார். பள்ளிவாசலை விட்டு வெளியே வந்த ஹசன் வேண்டிய உதவியைச் செய்தார். உதவி கேட்டு வந்தவர், “தங்களின் சகோதரரிடம் நான் உதவி கேட்டேன். அவர் தொழுகையில் இருந்து வர மறுத்தார். தாங்கள் வந்து விட்டீர்களே!” என்றார். அதற்கு ஹசன்,“ மற்றவருக்கு உதவி செய்வதற்காக தொழுகையை விட்டு வெளியே வருவோருக்கு ஹஜ்ஜூம் (ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மெக்கா செல்வது), உம்ராவும் (எப்போது வேண்டுமானாலும் மெக்கா செல்வது) செய்த நன்மை உண்டாகும். உதவ முடியாவிட்டாலும், அதற்காக முயற்சித்தாலும் கூட உம்ரா மட்டும் செய்த நன்மை உண்டு” என்றார். பிறர் துன்பம் தீர்க்க எப்போதும் உதவிக்கரம் நீட்டுங்கள்.