பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கன்னியா லக்னத்தில் பந்தக்கால் நடும் விழா நடந்தது. இன்று விழா தொடங்கி, தினமும் காலை உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். இரவு நேரங்களில், சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில், தல விருட்சம் மகிழ மரத்தை தினமும், 10 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.