பழநி: பழநி முருகன் மலைக்கோயில் மற்றும் கிரிவீதி வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினியம்மன் கோயில்களில் வருடாபிஷேக விழா நடந்தது.
பழநி மலைக்கோயிலில் பகல் 12:00மணி உச்சிகால பூஜையில் பாரவேல் மண்டபத்தில் கும்பகலசங்கள் வைத்து யாகபூஜையும், மூவலருக்கு புனிதகலசநீர் அபிஷேகம், வைதீகாள் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மேற்குகிரிவீதியில் மகிஷாசுர மர்த்தினியம்மன் கோயிலில் யாகபூஜையுடன், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதேபோல தெற்குகிரிவீதி வனதுர்க்கையம்மன்கோயில், நடேசர் வீதி அபரஞ்சித விநாயகர், கோசாலை விநாயகர், உத்திர விநாயகர் ஆகிய கோயில்களில் வருடாபிஷேக யாகபூஜை, அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உபயதாரர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.