பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை அருகே, அம்மாபட்டியில், பொம்மையசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஏப்.,10ல்)நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி அம்மாபட்டியில், பழமையான பொம்மையசாமி கோவில், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 9 ம் தேதி துவங்கியது. அன்று, புனித தீர்த்தங்கள் அழைத்து வருதல் கணபதி பூஜை, திக்பாலர் பூஜை உட்பட பூஜைகள் நடந்தன. விழாவில், நேற்று (ஏப்., 10ல்) தன்வந்திரி ஹேமம், பொம்மையசாமி மூலமந்திரம் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, காலை 9:15 மணி முதல் தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர், கிராம எல்லையில் இருந்து, தம்புரான் மாட்டுடன் தேவநத்தம் எடுத்து
வந்தனர்; பின்னர், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.