பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
11:04
பழநி: பழநி முருகன்கோயில் உபகோயிலான, மேற்குரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,11 முதல் 20 வரை நடக்கிறது.
நேற்று முதல்நாள் கொடியேற்றத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. காலை 9:45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. துணை ஆணையர் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,17ல் இரவு திருக்கல்யாணமும், ஏப்.,19ல் காலையில் தேரோட்டமும் நடக்கிறது. விழா நாட்களில் பெருமாள், சஷேம், அனுமார், சிம்மம் ஆகிய வாகனங்களில் வீதிஉலா வருகிறார். பக்திசொற்பொழிவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.வெள்ளித்தேரோட்டம்: ஏப்.,19ல் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் எடுத்து வந்து திருஆவினன் குடிகோயிலில் அபிஷேகம் நடக்கிறது. இரவு வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ் செய்கின்றார்.