முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2019 11:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
இக்கோயில் பங்குனி பொங்கல் விழாவை யொட்டி பக்தர்கள் பொங்கலிட்டும், அக்னி சட்டி எடுத்தும்,பல்வேறு வேடமணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நினைத்ததை நிறைவேற்றி தந்த முத்து மாரியம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் விரதம் இருந்து நேற்று அதிகாலையில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவையொட்டி தினமும் கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் ,எஸ்.பி.கே., பொருட்காட்சியும் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.