அலங்காநல்லூர்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 81 கிராம் தங்கம், 241 கிராம் வெள்ளி, ரூ.31.50 லட்சம், வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. உபகோயிலான தல்லாகுளம் பெருமாள் கோயில் உண்டியல்களில் 31 கிராம் தங்கம், 42 கிராம் வெள்ளி, ரூ.5.20 லட்சம், வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி அனிதா, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி கண்காணிப்பில் இப்பணி நடந்தது.