அலங்காநல்லூர்: பாலமேடு செல்லத்தம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. செல்லத்தம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
பின் பெரிய கிணற்றிலிருந்து கரகம் அலங்கரித்து காளியம்மன் கோயிலுக்கு சென்று விசேஷ பூஜை நடந்தது.அன்றிரவு நகைபெட்டிகள் மற்றும் பொங்கல் பானைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று செல்லத்தம்மனுக்கு பொங்கல் வைத்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. அதிகாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து, சக்திகிடாய்வெட்டுதல் நடந்தது. மாலையில் பழதட்டுகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு பழ அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகள் பாலமேடு வடக்குதெரு பொது மகாசபை சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.