பதிவு செய்த நாள்
06
மார்
2012
11:03
கர்னூல் :ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் அகோபிலம் பீடாதிபதிக்கு, அவரது சிஷ்யர்கள் தங்க சிம்மாசனத்தைப் பரிசாக வழங்கினர்.அகோபில மடத்தின், 48வது பீடாதிபதி ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமிக்கு, 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சிம்மாசனத்தை, மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுவாமிகளிடம், நேற்று முன்தினம் வழங்கினர்.சிம்மாசனத்தை, மாலோல நரசிம்ம சுவாமி சன்னதியில் வைத்து, மடத்தின் முதன்மை அர்ச்சகர் தலைமையில், வேத மந்திரங்கள் ஓதி, சிறப்புப் பூஜை செய்தனர். தங்க சிம்மாசனத்தின் மீது, பீடாதிபதி ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமி அமர்ந்தபடி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.