ராமரின் பிரிவைத் தாங்காமல் அசோகவனத்தில், உயிர் விட எண்ணி கயிற்றால் கழுத்தில் சுருக்கிட முயன்றாள் சீதை. அந்த சமயம் சீதையை காப்பாற்ற வந்த அனுமன் பதறினார். அன்னையை காப்பாற்றும் விதமாக ராமரின் வரலாறை பாடலாக பாடினார். ’ஹனும தோடி’ என்னும் ராகத்தில் அமைந்த அப்பாடலைக் கேட்ட சீதையின் மனம் மாறியது. அங்கிருந்த ராட்சஷிகள் அப்பாடலின் இனிமையால் தங்களை மறந்து தூக்கத்தில் மூழ்கினர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அனுமன் தன்னை ’ராமதூதன்’ என தெரிவித்தார்.