பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
05:04
அன்னூர்: அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவில், 31ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த, 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.வரும், 16ம் தேதி மாலையில் காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடக்கிறது. 18ம் தேதி இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 22ம் தேதி இரவு அணிக்கூடை எடுத்தலும் நடக்கிறது. 23ம் தேதி காலையில் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைப்பு, பொதுமக்கள் பூவோடு எடுத்தல், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.