செஞ்சி : செஞ்சி பெரியகரம் செல்வ விநாயகர் கோவிலில், லட்சதீப விழா நடந்தது.செஞ்சி காந்தி பஜார் பெரியகரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, 72ம் ஆண்டு லட்சதீப பெருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு, காலையில் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6.00 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 10.00 மணிக்கு வாண வேடிக்கையுடன சுவாமி வீதி உலா நடந்தது.