மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் விவசாய பயிர்கள் அனைத்தும் நீரின்றி காய்ந்து வருகின்றன.
இதனால், விவசாயிகளும் பொது மக்களும் மழை வேண்டி பல ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிறுமுகையை அடுத்த சென்னம்பாளையம் அருகே வடபொன்முடியில் பண்டல் மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு மழை வேண்டி மாவிளக்கு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து பிரார்த்தனை செய்தனர்.சிறப்பு பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.